இராகலை தோட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக சேதம்

561 Views

இராகலை காவல் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக் கொண்ட நெடுங்குடிப்பில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளன.

See the source image

இந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 26 பேரும், பெண்கள் 32 பேரும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 3பேரும் அடங்குகின்றனர்.

இத் தீ விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்ற போதிலும் பெருமளவு பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. எனினும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply