இரத்தம் போன்று கைகளில் வர்ணங்களை பூசிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு நிதி வழங்குவது தொடர்பான காங்கிரசின் கூட்டத்தின் அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் அந்தோனி பிளிங்டன் பேசியபோது அதனை இரத்தம் போன்று கைகளில் வர்ணங்களை பூசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பல தடவைகள் குழப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசாவில் இடம்பெறும் படுகொலைகள் நிறுத்தப்படவேண்டும், சிறுவர்களை கொல்லாதே என்ற கோசங்கள் எழுப்பப்பட்டது. எனினும் காவல்துறையினரால் பலர் அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே, காசாவில் உள்ள ஜபலியா அகதிகள் மூகாம் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 400 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என காசாவின் உள்த்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன. பெருமளவானோர் காளமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலா ஒரு தொன் எடை கொண்ட 6 குண்டுகள் வீசப்பட்டதாகவும், முகாம் முற்றாக அழிந்ததுடன், அருகில் உள்ள வீடுகளும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.