இன்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி

எதிர்வரும் தினங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்பப்ங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்று வீசுவதன் காரணமாக மக்கள் பாதிப்புக்களை குறைத்திட போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலே உச்சம் பெற்று காணப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் (13) பகல் 12.11 மணிக்கு வெள்ளான்குளம், உயிலங்குளம் மற்றும் கச்சிலமடு ஆகிய பிரதேசங்களில் உச்சம் பெற்று காணப்படுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.