இனவாத பிக்கு தலைமையிலான பிக்குகள் செம்மலையில் ; பதற்றமான சூழல், தமிழர்களும் திரண்டுள்ளனர்

510 Views

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு வின் இறுதிக்கிரியைகள் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர்.

இதன்காரணமாக குறித்த பகுதி தற்போது பற்றம் நிறைந்த ஒரு பகுதியாக மாறியுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அதிகளவான தமிழ் மக்களும் குவிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply