இந்திய ரோட்டரி கழக அங்கத்தவர்கள் பின் தங்கிய பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவர்களின் மத்தியில் கல்வி தரத்தை மேம்படுத்துவதட்காக “கல்வி சக்தி” என்னும் செயல் திட்டத்தை அறிமுகப் படுத்துவதட்காக கடந்த புதன்கிழமை(8) திருகோணமலை ரோட்டரி கழக அங்கத்தவர்களை சந்தித்தார்கள்.
திரு மோகன்குமார் – தலைவர் பெங்களூரு உல்சூர் (Ulsoor) ரோட்டரி கழகம்,. திரு. R.P.ஷெட்டி, திரு ரவி, திரு.G. சேகர், & திரு..V, சோமசுந்தரம் (பெங்களூரு உல்சூர் ரோட்டரி கழகம்,) திரு.S,பஞ்சநாதன் – பெங்களூரு உத்யோக் (Udyog) ரோட்டரி கழகம், மற்றும் திரு P .நாகராஜன் – “கல்வி சக்தி” செயல் திட்ட இணைப்பாளர், இவர்களுடன் திரு.T.R ,தனசேகரன் – சென்னை சன் சிட்டி ரோட்டரி கழகம், இவ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றினார்.
“கல்வி சக்தி” திட்டத்தின் மூலம் பின் தங்கிய கிராமப் பகுதியில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதட்கு இணையம் மூலமாக சிறந்த ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை கற்பிப்பார்கள். சகல நிலயத்திட்கும் ஒரு இணைப்பாளர் கடமையாற்றுவார்.
தற்சமயம் இந்தியாவில் 200 நிலையங்களும் இலங்கையில் 3 நிலையங்களும் செயல்படுகிறது. இதுவரை இச் செயல்பாட்டின் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள். இதன் மூலம் திருகோணமலை மாவட்ட மாணவர்கள் நிச்சயம் பயன் பெறுவார்கள்.