இந்திய படையில் அமெரிக்க Sig Sauer

305 Views

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் புதிய நவீன ரக துப்பாக்கிகளை இந்திய இராணுவம் பெறுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக முதல்கட்டமாக 10,000 சிக் சாவர்( Sig Sauer assault rifles SIG716 ) எனும் நவீன ரக தாக்குதல் துப்பாக்கிகளை அதன் படைப்பிரிவுகளில் இந்திய இராணுவம் சேர்க்கத் தொடங்கியுள்ளது.1.62 x 51 mm அளவு கொண்ட தோட்டாக்களை பயன்படுத்தும் இந்த துப்பாக்கி அரைத் தானியங்கி(semi-automatic) நிலைகொண்டது .

இந்தியா தனது இராணுவ வீரர்களை அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளுடன் தயார்படுத்துவதற்கு தேவையான விரைவான நடைமுறைகளின் கீழ் இதுபோன்று 72,400 சிக் சாவர் ரக துப்பாக்கிகளுக்கு கொள்முதல் ஆணை பிறப்பித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply