இந்திய கொரோனா திரிபுக்கு எதிராக அமெரிக்க தடுப்பூசிகள்

363 Views

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபுக்கு எதிராக அமெரிக்ககாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் வேலை செய்வதாக அமெரிக்க சுகாதார துறையின் மூத்த அதிகாரி ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் மையத்தின் இயக்குநரான ஆண்டனி ஃபாசி ,அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகராகவும் விளங்குகிறார்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 கொரோனா வைரஸ் திரிபு ‘சர்வதேச கவலைக்குரிய திரிபு’ (variant of global concern) என்று உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் இந்த திரிபுக்கு எதிராக பகுதி அளவோ, ஒரு வேளை முழுமையாகவோ பாதுகாப்பு அளிக்கலாம் என்று அவர்   தெரிவித்துள்ளார்.

Leave a Reply