இந்தியப் பிரதமரின் செய்தியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் நாளை இலங்கை விஜயம்

384 Views

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் முக்கியமான விஜயமொன்றை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை சந்திக்கவுள்ள அவர் , இந்திய பிரதமரின் முக்கிய செய்தியொன்றையும் எடுத்துவருவாரென உயர்மட்ட இந்திய அரசியல் வட்டாரங்களை ஆதாரம் காட்டி வெளியான செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

சீன, அமெரிக்க உயர்மட்டத் தூதுக்குழுக்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தையடுத்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பு வருவது முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.

Leave a Reply