ஆஸ்திரேலியாவுக்கு இரகசியமாக அழைத்துவரப்பட்ட அகதிகள்!

360 Views
நவுறு தீவில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் 24 புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அழைத்துவரப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள், டார்வின் மற்றும் நியூ சவுத்வேல்ஸின் விலவூட் அகதிகள் முகாம்களில் தற்போது தடுத்துவைக்கப் பட்டிருப்பதாக அறியவருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில் – கடந்த செப்ரெம்பர் மாதம் – இவ்வாறு டார்வினுக்கு மருத்துவ காரணங்களுக்காக கொண்டுவரப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் இன்னமும் எந்த மருத்துவ சோதனைக்கும் கொண்டுசெல்லப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்றும் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளவர்கள் ஊடகங்களுடன் பேசுவதற்கு மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறார்கள் என்றும் The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply