ஆயிரத்தை கடந்துள்ள கொரோனா மரணங்கள் – நேற்று ஒரே நாளில் 34 பேர் சாவு

298 Views

இலங்கைக்குள் கொரோனா மரண எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் 34 பேர் கொரோனாவினால் மரணமானதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் அதிகமானவர்கள் மரணமடைந்த தினமாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 1015 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இன்று மாத்திரம் 2478 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.

Leave a Reply