ஆப்கானிஸ்தானின் ஹெராட் பகுதியில் நேற்று (7) இடம்பெற்ற பூமி அதிர்வினால் 2000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.
முதலில் 320 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், தற்போது அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அங்கு நேற்று 6.3 புள்ளியளவான பூமி அதிர்வு பதிவாகியிருந்தது.
அந்த பிராந்தியத்தில் மிகப்பெரும் அழிவுகள் எற்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், ஆப்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.