ஆதி மனித இனத்தின் எச்சங்கள் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு

390 Views

சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய மனித இனம் வாழ்ந்த அதே காலகட்டத்தில் வாழ்ந்த ஆதி மனித இனம் ஒன்றை இஸ்ரேலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆதி மனித இனம் வாழ்ந்திருந்தது இதற்கு முன்பு அறியப்படவில்லை. இஸ்ரேலில் உள்ள ராம்லா எனும் நகரத்தின் அருகே கண்டறியப்பட்டுள்ள இந்த எச்சங்கள் அந்த ஆதி மனித இனத்தில் “கடைசியாக வாழ்ந்திருந்தவர்களின்” எச்சங்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த நபர் ஒருவரின் பகுதி அளவு மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பு ஆகியவையும் தற்போது கண்டறியப்பட்டுள்ள எச்சங்களில் அடக்கம்.

இந்தக் கண்டுபிடிப்பின் விவரங்கள் ‘சயின்ஸ்’ எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply