அவுஸ்திரேலியா- நியூசிலாந்து உறவில் முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ள ‘நாடுகடத்தல் விவகாரம்’

அண்மையில், நியூசிலாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தில் அவுஸ்திரேலியா- நியூசிலாந்து உறவில் முறுகலான நிலை ஏற்பட்டுள்ளது.

குற்றப்பின்னணியைக் கொண்ட அவுஸ்திரேலியர்கள் அல்லாதவர்களை வெளியேற்றுவதை ‘குப்பைகளை வெளியேற்றுதல்’ என்ற பதத்தில் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. குற்றப்பின்னணி, குணநலன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த நாடுகடத்தல் முறை பற்றி தற்போது இருநாட்டுத் தரப்பிலும் பல்வேறு விவதாங்கள் மேலெழுந்துள்ளன.