அவுஸ்திரேலியா: தமிழ் அகதி குடும்பத்தை நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியமர்த்த திட்டம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பத்தை (பிரியா- நடேசலிங்கம்) எங்கே குடியமர்த்துவது என்பது தொடர்பில் உள்துறை அமைச்சர் Karen Andrews-இன் அலுவலகம் ஆராய்ந்துவருவதாகவும், ஆனால் இவர்களை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்துவது தொடர்பில் ஆராயப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதென்பது ‘ அவுஸ்திரேலிய தடுப்புமுகாம்களில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் அனைவருக்கும் பொருந்தும்'(தகுதிபெற்றவர்கள் மட்டும்) என உள்துறை அமைச்சர் Karen Andrews வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஎஸ் தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Leave a Reply