அவுஸ்திரேலியா: உடல்நலம் பாதிக்கப்பட்ட அகதி நாடுகடத்தப்படும் அபாயம்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பாக செயல்படும் நவுருத்தீவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட ஈரானிய அகதியை, மீண்டும் நவுருத்தீவுக்கே நாடுகடத்தும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

34 வயதான எல்லி என்னும் ஈரானிய அகதி கடல் கடந்த தடுப்பில் 6 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவுஸ்திரேலியாவுக்குள் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

உடல் நல ரீதியாகவும் மன நல ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள அந்த அகதியை நவுருக்கு நாடுகடத்த கடந்த ஜூன் 3ம் தேதி திட்டமிடப்பட்டிருக்கிறது.

பின்னர், மெல்பேர்னில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து நாடுகடத்தும் நடவடிக்கை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.