304 Views
ஈராக்கிலிருந்து வெளியேறிய முகமது அல்-கபாஜி அவுஸ்திரேலியாவில் தங்கள் குடும்பத்தினருடன் அரசியல் தஞ்சம் கோரிய போது அவரது 13 ஆகும். தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை அவுஸ்திரேலியாவிலேயே அவர் கழித்திருக்கிறார்.
இந்த நிலையில், அவரை விமான நிலையத்தில் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர், அவரைப் பார்த்து, “எந்த நாட்டிலிருந்து வந்தாயோ அந்த நாட்டுக்கே திரும்பிப்போ,” எனக் கத்தியிருக்கிறார்.
“யாரோ ஒருவர் ஆஸ்திரேலியாவில் உள்ள என்னைப் பார்த்து வந்த இடத்திற்கு திரும்பிப்போ என்பது அவமானமாக உள்ளது,” என்கிறார் முகமது.
இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று சூழல் ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் பெரும் பிரச்னையாக உள்ள இனவாதத்தை அதிகரித்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார் இனப் பாகுபாடு தொடர்பான முன்னாள் ஆணையர் Tim Soutphommasane.