அவுஸ்திரேலியாவின் ‘கொரோனா’ எல்லைக் கட்டுப்பாட்டில் பாகுபாடு: இந்தியர்கள் கவலை

310 Views

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையை இந்தியா எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு திரும்புபவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அவுஸ்திரேலிய அரசு மேற்கொண்டு இருக்கிறது.

இந்த சூழலில், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கொரோனா தொற்று பெருமளவில் பரவிய போது அந்நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு திரும்பியவர்களுக்கு இவ்வாறான எல்லைக் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்ற கவலையை இந்திய வம்சாளி அவுஸ்திரேலியர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியாத நிலையினால் தன்னால் தூங்கக்கூட முடியாத கடும் அச்சமான நிலையில் தான் உள்ளதாக தெரிவித்திருக்கிறார் இந்திய வம்சாவளி அவுஸ்திரேலியரான ஷர்மா மரார்.

Leave a Reply