அவசரமாக கொழும்பு வருகின்றார் அமெரிக்க வெளிவிவகார செயலாளர்

617 Views

உயர்மட்ட சீன அதிகாரிகளின் சிறீலங்கா பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ சிறீலங்காவுக்கு அவசர பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிற்போட்டிருந்த அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் எதிர்வரும் 27 ஆம் நாள் கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளிவிவகாரச் செயலாளர் ஜோன் கெரி சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட பின்னர் இடம்பெறும் உயர்மட்டப் பயணம் இதுவாகும்.

நெருக்கடியை சந்தித்துள்ள மிலேனியம் சலஞ் உடன்பாடு, மற்றும் சோபா எனப்படும் படைத்துறை உடன்பாடு போன்றவை தொடர்பில் சிறீலங்கா அதிபர் கோத்தபாயா ராஜபக்சாவுடன் பொம்பியோ பேச்சுக்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply