அல்ஜசீரா ஊடகத்தை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயற்சி

பாலஸ்தீன – இஸ்ரேல் போரில் அல்ஜசீரா ஊடகம் அதிகளவில் காசாவில் இடம்பெறும் மனிதப்பேரவலங்களை வெளிக்கொண்டுவருவதால் அதனை நிறுத்துமாறு கட்டார் அரசுக்கு அமெரிக்கா அதிக அழுத்தங்களை கொடுத்துவருவதாக அக்சியோஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் உடனான உறவுகளை மாற்றுமாறு அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் அந்தோனி பிளிங்டன் கடந்த வாரம் கட்டாருக்கு சென்றபோது கட்டார் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அல்ஜசீரா ஊடகம் காசா நிலவரம் தொடர்பில் அதிகளவிலான தகவல்களை வெளியிடுவதாகவும், பல தகவல்கள் இஸ்ரேலுக்கு எதிராக இருப்பதாகவும் பிளிங்டன் கட்டார் அரசிடம் தெரிவித்துள்ளார் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

அல்ஜசீரா ஊடகம் பாலஸ்தீன குழுவின் பிராச்சார ஊடகம் என இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளதுடன், அதனை தடை செய்யும் வழிகளையும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்ஜசீரா ஊடகத்தின் ஊடகவியாலாளர் வெல் அல் டாகூட் என்பவரின்; குடும்பத்தினர் அனைவரும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டது மிகுந்த வேதனைகளை ஊடத்துறைக்கு ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 வாரங்களில் 24 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.