அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழில் போராட்டம்

247 Views

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் அவர்களின் விடுதலைiயை வலியுறுத்தியும் இன்று யாழ். நல்லூர் ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

0?ui=2&ik=008a654ed4&attid=0.1 அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழில் போராட்டம்

இன்று முற்பகல் 10 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் பின்புறமாக உள்ள நல்லை ஆதீன முன்றலில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் அபயாத்தை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றியும் சுகாதார நிடைமுறைகளை கடைப்பிடித்தும் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply