அமெரிக்காவின் 900 படையினர் இஸ்ரேலுக்கு வெள்ளிக்கிழமை (27) வந்துள்ளனர். அதனுடன் பல உலங்குவானுதிகள் தரித்து நிற்கும் வசதிகள் கொண்ட பிரான்ஸின் கடற்படைக்கப்பலும் பல நூறு படையினருடன் இஸ்ரேலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலம் பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் படையினரும் இஸ்ரேலுக்கு அனுப்ப்பட்டுள்ளனர்.
அமெரிக்க படையினர் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் முகமாக அங்கு அனுப்ப்பட்டுள்ளதாகவும், அங்கு மேலும் இரண்டு அயன்டோம் பாதுகாப்பு சாதனங்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் பென்ரகன் தெரிவித்துள்ளது.
எனினும் வெள்ளிக்கிழமையும், ரெல் அவிவ் பகுதியில் ஹமாஸின் ஏவுகணைகள் தொடர்ந்து வீழ்ந்து வெடித்துள்ளது.