அம்பாறை மாவட்டத்தில் நீண்டகால தேவையாக இருந்து வந்த மூன்று தமிழ் பிரதேச செயலகங்களை நிறுவுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோடீஸ்வரன் தலைமையிலான குழுவொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை 08ஆம் திகதி கொழும்பில் சந்தித்தது. இந்தச் சந்திப்பின் போதே இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலின் போது புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்குமாறு இதன் போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அம்பாறையில் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தக் கோரிக்கை சில மாதங்களுக்கு முன்னர் வலுத்து பல்வேறு போராட்டங்களுக்கும் வழிவகை செய்தது. எனினும் இது குறித்து தீர்வு எட்டப்படாத நிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் கடந்த பல ஆண்டுகளாக ஆடசியில் இருந்துவரும் ரணிலின் இப்போதைய இந்த இணக்கம் ஒரு தேர்தல் நாடகம் என்கின்றனர் சில நோக்கரக்ள்