அம்பாறையில் மீண்டும் கனிம வள திருட்டு – மக்கள் எதிர்ப்பு

அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் உமிரியில் மீண்டும் இல்மனைற் கனிமவள மணலை அகழ்வதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டபோது மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (31) இடம்பெற்றுள்ளது. அரச அதிகாரிகளும், அகழ்வை மேற்கொள்ளும் நிறுவனமான தம்சிலா எக்ஸ்போட் நிறுவனத்தின் அதிகாரிகளும் களநிலையை ஆய்வு செய்வதற்காக அங்கு வந்திருந்தனர்.

எனினும் இதனை அறிந்த மக்கள் அங்கு ஒன்றுகூடி கடுமையான தமது எதிர்ப்பை தெரிவித்ததுடன், தீக்குளிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply