கடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் பாதுகாப்புப் படைகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புதரப்புக்கு அதிரச்சியைக் கொடுத்த இந்த அதிநவீன இயந்திரங்கள் எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன, இதற்கான நோக்கம் என்ன என்பது குறித்து சிறீலங்கா காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் இதன்போது இலங்கை கடற்படையின் அதிவேகப் படகைவிட கூடுதல் வேகத்தில் இந்த நீர்மூழ்கி இயந்திரங்கள் செல்லக்கூடியது என்று அங்கு கண்டுபிடிக்கப்பட்ட விளக்கப் புத்தகத்தில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போர் நிறைவடைந்த பின்னரும் சிறீலங்கா அரசு வடக்கில் படைப் பரம்பலை ஏற்படுத்தி தமிழ் மக்கள் மீது ஒரு படைத்துறை ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகையில் சிறீலங்கா அரசியல்வாதிகளின் துணையுடன் இஸ்லாமியத் தீவிரவாதம் சிறீலங்காவின் எல்லாப் பகுதிகளிலும் பலமடைந்துள்ளதையே இது காட்டுவதாக படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.