அமெரிக்க மக்களின் பாதுகாப்பு கருதி சிரியாவை தாக்கினோம் – பைடன்

அமெரிக்காவின் இரண்டு எப்-16 விமானங்கள் சிரியாவில் உள்ள ஈரானின் ஆயுதக்கழஞ்சியங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஐக்கியநாடுகள் சபையின் சரத்து 51 இன் அடிப்படையில் தற்பாதுகாப்புக்கு தாக்கமுடியும் என இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்களை பாதுகாப்பதற்கு இந்த தாக்குதல் அவசியமானது. அதாவது சிரியாவின் கட்டுமானங்களை தாக்கி அழிப்பது அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கு அவசியம் என பைடன் கருதுகின்றாரா என சிரிய தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால் அமெரிக்காவின் விமானங்கள் ஆட்கள் அற்ற கிராமத்தில் உள்ள பாழடைந்த வீட்டையோ தாக்கியதாக மாசுட் அஸ்டாலகி ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும் ஈரான் இது தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்கவில்லை.