அமெரிக்க படைத்தளத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள பேர்ல் துறைமுகத்தில் அமைந்துள்ள இராணுவத் தளமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அந் நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாலுமியொருவரே இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதாகவும், இதன்போது கப்பலில் தொழில் புரிந்த இரு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது மேலும் ஒருவர் படுகாயமடைந்தது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்துள்ளதாகவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்