எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஜோ பிடன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகின்றார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடன் அதிபர் பதவிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு இணையவழி மூலம் நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து ஜோ பிடனை அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஜோ பிடன் தனது ருவிற்றர் பக்கத்தில் “அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வது எனது வாழ்க்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய மரியாதை” என்று பதிவிட்டுள்ளார்.