அமெரிக்கா தலைமையில் கூடிய சீன எதிர்ப்பு கூட்டணி

369 Views

ஆசியாவின் நேட்டோ என அழைக்கப்படும் நான்கு நாடுகளின் கூட்டணித் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (12) முதல் தடவையாக ஒன்றாக கூடி கலந்துரையாடியுள்ளனர்.

காணொளி ஊடாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹரிஸ், யப்பான் பிரதமர் ஜோசிகைட் சூகா, அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கோவிட்-19 நெருக்கடி தொடர்பான விடயங்கள் ஆரயப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் படைத்துறை வளர்ச்சிளை தடுக்கும் நடவடிக்கைகளும் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிய வகை தாதுப்பொருட்களை மட்டுப்படுத்துவது தொடர்பிலும், இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையை அதிகாரிப்பது தொடர்பிலும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

இதனிடையே, இந்த நான்கு நாடுகளின் கூட்டத்தினை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சோவோ லிஜியன் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பிராந்தியத்தின் அமைதியை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply