இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை (7) மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 பேர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜக் சுலிவன் தெரிவித்துள்ளார்.
எனினும் காணாமல்போவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்களா என்பது தொடர்பில் தகவல்கள் தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரித்தானியாவை சேர்ந்த 10 பேரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். காணாமல்போனவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. ஏறத்தாள 15 இற்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
பல நாடுகள் தமது மக்களை இஸ்ரேலில் இருந்து அவசர அவசரமாக வெளியெற்றி வருகின்றன.