அமெரிக்காவும் – சீனாவும் நேரிiடையன படைத்துறை தொடர்புகளை ஏற்படுத்தின

அமெரிக்காவின் நடாளுமன்ற பேச்சாளர் நான்சி பொலஸ்கியின் தாய்வானுக்கான பயணத்தை தொடர்ந்து அமெரிக்காவுடன் நேரிடையான படைத்துறை உறவுகளை முறித்துக்கொண்ட சீனா தற்போது மீண்டும் ஏற்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சான்பிரான்ஸிகோவில் இடம்பெறும் ஆசிய பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா அதிபர் சி ஜின்பிங் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இரு தலைவர்களும் கலந்துரையாடிய பின்னரே பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது இதுவே முதல்தடவை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் இடம்பெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதை சீன மற்றும் ரஸ்ய தலைவர்கள் தவிர்த்ததால் அமெரிக்க அதிபருடனான சந்திப்பு இல்லாது போயிருந்தது.

அதேசயம், போதைப்பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படும் இரசாயணப் பொருருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது, செயற்கை நுண்ணறிவு தொடர்பில் இணைந்து பணியாற்றுவது தொடர்பிரும் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

மேலும் பாலஸ்தீன விடயம் தொடர்பில் சீன அதிபருடன் பேசிய பைடன், ஹாமாஸ் அமைப்புக்கு ஈரான் உதவுவதை சீனா தடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தள்ளார்.