அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பு ஒன்றின் தலைவரை படுகொலை செய்வதற்கு இந்திய அரசு முயன்றுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தியாவின் சிசி-1 என்ற பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நிகில் குப்தா(52) என்ற நபர் தனது படுகொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்காவில் உள்ள கூலிபடையினரை அணுகியுள்ளார். கடந்த மே மாதம் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சீக்கிய அமைப்பின் தலைவரை படுகொலை செய்வதற்கு 100,000 டொலர்களை வழங்குவதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததுடன், 15,000 டொலர்களை மற்பணமாகவும் கடந்த ஜுன் மாதம் வழங்கியிருந்தார்.
ஆனால் அவர் அணுகிய நபர் கூலிப்படையை சேர்ந்தவர் அல்ல, அவர் அமெரிக்காவின் போதைவஸ்த்து தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி. ஆந்த அதிகாரி சிவில் உடையில் புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவர்.
அதை அறியாத இந்திய புலனாய்வு அமைப்பு, அமெரிக்க புலனாய்வு அமைப்பிடம் வசமாக சிக்கிக் கொண்டது. குப்தாவை தொடர்ந்த அமெரிக்க புலனாய்வுத்துறை அவரை செக் நாட்டில் வைத்து கைது செய்துள்ளதுடன், அவரை நாடுகடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.
அவரின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டவை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.