அமெரிக்காவின் மெயின் மாநிலத்தில் லுவிஸ்டன் பகுதியில் உள்ள விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இதுவரையில் 22 கொல்லப்பட்டதாகவும், பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு நூற்றுக்கணக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். தன்னியங்கி துப்பாக்கி தாங்கிய ஒருவரே இந்த படுகொலையை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.