அன்பான சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! – தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் முக்கிய வேண்டுகோள்

352 Views

”மீண்டும் அதிகரித்து வரும் கோவிட் 19இன் தாக்கம் காரணமாக, கடந்த 28.10.2020 அன்று சுவிஸ் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட விதி முறைகளிற்கமைவாக வழமைபோன்று இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்துவதற்காகப் பிறிபேர்க் மாநிலத்தில் அமைந்துள்ள போறூம் (FORUM) மண்டப நிர்வாகத்தினரிடம்  எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதி இடைநிறுத்தப்பட்டிருக்கிறது என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்” என தமிழீழ விடுதலைப்புலிகள் –  சுவிஸ் கிளை அறிவித்துள்ளது.

“மேலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் இல்லங்களில் தேசிய மாவீரர்களை நினைவுகூர்வதற்காகக் கீழ் வரும் ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்பதனையும் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

WhatsApp Image 2020 11 09 at 6.09.29 PM அன்பான சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! - தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் முக்கிய வேண்டுகோள்

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அன்று தொடக்கம் இன்றுவரை முழுமையான ஆதரவுகளை வழங்கி வலுச்சேர்த்து வருகின்றீர்கள். அதனடிப்படையில், கடந்த காலங்களில் மாவீரர் நாள் நிகழ்விற்காக நீங்கள் வழங்கிய பங்களிப்பானது தேசிய மாவீரர் நாள் நிகழ்வோடு மட்டும் நின்றுவிடாது தமிழீழ விடுதலைக்காய்
தங்களை அர்ப்பணித்து தங்கள் வாழ் வாதாரங்களை இழந்துநிற்கும் மாவீரர், போராளிகளின் குடும்பங்கள் மற்றும் மக்களின் நிரந்தர மீள் வாழ் வாதார தேவைகளுக்காகவும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டமை தாங்கள் அறிந்ததே. இவ்வாறான தொடர் பங்களிப்பினால் மட்டுமே போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தமுடியும்.  எனவே, தங்களது தாராள உதவிகளைத் தொடர்ந்தும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

WhatsApp Image 2020 11 09 at 6.09.45 PM அன்பான சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! - தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் முக்கிய வேண்டுகோள்

கோவிட் 19இன் பேரிடர் காலத்தில், உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியமான வாழ்வைக் கவனத்திலெடுத்து, சுவிஸ் அரசினால் வழங்கப்படும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறும், தொடர்ந்து வரும் காலங்களிலும் தாயக இலட்சியம் நோக்கிய விடுதலைப் போராட்ட
முன்னெடுப்புகளுக்குத் தங்களின் புரிந்துணர்வு மிக்க உணர்வுபூர்வமான ஆதரவினையும் முழுமையான ஒத்துழைப்புகளையும் வழங்கவேண்டும் எனவும்  உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்” என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply