அனைத்து இந்து  அமைப்புகளின் பிரதிநிதிகளும் யாழ். நீதி மன்றில் ஆஜராக தீர்மானம்

இன்று  (18) அனைத்து இந்து  அமைப்புகளின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாண நீதி மன்றில் ஆஜராக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வணிக கழகத்தின் தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார்.

நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்தித்தின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சித்திரை புத்தாண்டு தினத்தன்று தீவக நுழைவாயிலில் நயினா தீவு அம்மனின் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம் பெற்றமையை அடுத்து யாழ்ப்பாண பொலிஸாரினால் குறித்த சிலையினை அகற்ற அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நீதிமன்றினால் குறித்த சிலையுடன் தொடர்புடையோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பு கட்டளை விடுத்துள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை  நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி கலந்துரையாடி இன்று  செவ்வாய்க்கிழமை இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றாக நீதிமன்றத்தில் ஆஜராகுவதென தீர்மானித்துள்ளனர்.