அனலைதீவுக்கான போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்

351 Views

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்,அனலைதீவு பகுதியைச் சேர்ந்த கடற் தொழிலில் ஈடுபடும் இருவர் இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இருவரும் அனலைதீவு பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணத்தால் முதல் கட்டமாக அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் கடற்படையினரின் உதவியுடன் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்கள்.

அந்தவகையில் இன்றில் இருந்து யாழ்ப்பாணம் அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 186 பேருக்கான  Covid-19  பரிசோதனைகள் யாழ்  போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. அதில் மன்னாரைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply