ஜப்பான் சென்றுள்ள போப் பிரான்ஸிஸ், நாகசாகியிலுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
1945ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகளை வீசியது. இதில் நாகசாகியில் மட்டும் 27ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜப்பான் சென்றுள்ள போப் பிரான்ஸிஸ், அணுகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின் அங்கு நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசிய போப் பிரான்ஸிஸ், உலக நாடுகள் அணுகுண்டுகளை ஒழிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அணுகுண்டுகள் வைத்திருப்பது மனித குலத்திற்கும் இயற்கைக்கும் எதிரான குற்றம் என்றும் தெரிவித்தார்.