பெரும்கடல்களில் குறைவடையும் உயிர்வாயு;அழிவை எதிர்நோக்கும் உயிரினங்கள்

காலநிலை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து மாசுபாடு காரணமாக பெருங்கடல்களில் உயிர்வாயுவின் (ஓட்ஸிசன்) அளவு குறைவடைந்து வருவதாக ஐ.யூ.சி.என்(The International Union for Conservation of Nature) என்ற சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு தெரிவிகின்றது.

கடல் நீரில் ஊட்டச்சத்து குறைவடைவது பல தசாப்தங்களாக அறியப்பட்டாலும், காலநிலை மாற்றம் காரணமாக உயிர்வாயுவின் அளவு தற்போது மோசமடைந்து வருவதை இந்த ஆய்வு உறுதிசெய்துள்ளதாக ஐ.யூ.சி.என் கூறுகிறது.

1960 களில் 45 உடன் ஒப்பிடும்போது 700 கடல் தளங்கள் இப்போது குறைவடையும் உயிர்வையுவினால பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுறா, சூரை உள்ளிட்ட பல்வேறுவகையான மீன்கள் அழிவடையும் ஆபத்தை எதிர்நோக்குவதாக அவ்வமைப்பு மேலும் தெரிவிக்கின்றது.

பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து நைட்ரஜன் மற்றும் பொஸ்பரஸ் போன்ற வேதிப்பொருட்கள் கடலில் கலப்பது கடல் நீரில் உயிர்வாயுவின் அளவை பாதிக்கும் என்று நீண்ட காலமாக அறியப்படுகிறது, மேலும் இது முதன்மைக் காரணியாக உள்ளது.

இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால் கடல் நீர் உயிர்வாயுவுக்கு பெரும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. கடல்நீர் அதிக வெப்பமடைவதால் அங்கு உயிர்வாயு இழப்பின் அளவு என்றுமில்லாத வாறு அதிகரித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பில் உலகம் விரைந்து அக்கறை கொள்ளாவிடில் நிலம் மட்டுமல்ல கடலும் உயிரினங்கள் வாழமுடியாத மிக ஆபத்தான நிலை விரைவில் ஏற்றப்பட்டுவிடும்.