தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பெயரை மாற்ற வேண்டும் – குருபரன்

தமிழ் மக்களின் ஆயுதப்போரையோ அல்லது தமிழ் தேசியவாத அரசியலையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் ஏற்காதவர் என்பது நாம் அறிந்த விடயமே.

எனவே அவர் நேர்மையின் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டு ஒன்றில் தமிழ் பேசும் லிபரல் சனநாயக கட்சியாக தமிழரசுக் கட்சியை அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பை மாற்ற வேண்டும் என சட்டத்தரணி கு. குருபரன் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாக அறிவித்து அவர் இதனை மேற்கொள்ள வேண்டும். அவருக்கும் ஆதரவு தருவதற்கு வாக்காளர்கள் நிட்சயம் இருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.