கணக்கறிக்கையில் இருந்து தப்பிக்கும் அரச நிறுவனங்கள்

சிறீலங்காவின் புதிய அரசியல் திருத்தமான 20 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் 120 இற்கு மேற்பட்ட அரச நிறுவனங்கள் கணக்கறிக்கை பரிசோதனைகளில் இருந்து விதிவிலக்கு பெறும் நிலையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் அதிக கடன் சுமையைக் கொண்ட சிறீலங்கன் எயர்லைன் நிறுவனம், மின்சார நிறுவனம், காப்புறுதி நிறுவனம், எரிபொருள் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் அடங்கியுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கணக்கு ஆய்வு திணைக்களம் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது முறைகேடான நிதி கையாடல்களுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.