எவ்வெப்போது அழிவுகள்,எவற்றால்? முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.

பூமியில் அழிவுகள் ஏற்படும் சாத்தியங்களை விளக்கும் அட்டவணை இது. இந்த அட்டவணை 2014ம் ஆண்டு பிபிசி தளத்தில் ஏற்றப்பட்டது.

http://www.bbc.com/future/story/20141230-apocalypse-when

இங்கு காட்டப்பட்டிருக்கும் அழிவுகள் யாவும் மனிதரின் செய்கைகளால் ஏற்படக்கூடிய அழிவுகளே. மனிதரால் உலகத்திற்கு ஏற்படக்கூடிய அழிவுகள் அண்மைக் காலங்களிலேயே வரலாம் என்னும் ஆபத்தையும் இது காட்டுகிறது. மனிதர்களால் பூமிக்கு ஏற்படும் ஆபத்துக்கள் நிறைந்த தற்காலத்தை மானிடதாக்கத்தின் காலம் என்ற பொருளில் anthropocene என்று இப்போது அழைக்கிறார்கள்.

நம்மில் பலர் இதை நம்புவதில்லை அல்லது இதுபற்றி அதிகம் அலட்டிக்கொளவதில்லை. தற்சமய கொரோனா பாதிப்பும் சில ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு காட்டப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தால் இவையாவும் நடக்ககூடியவையே என்பதை புரிந்து கொள்ளலாம்.www எவ்வெப்போது அழிவுகள்,எவற்றால்? முழுதாக அழிந்துபோகும் மனித இனம்.

முதலாளித்துவ உலகில் இலாபத்தை மைய நோக்கமாக கொண்ட சக்திகள் இந்த அழிவுகளை தடுப்பதற்கான செயற்பாடுகளுக்கு தடைகள் போடும். அதோடு நவதாரளவாத பொருளாதாரம் செல்வத்தை ஒருசிலரிடம் கொடுத்து விடுவதால் அவர்கள் தங்கள் பணபலத்தைக் கொண்டு அரசுகளையும் தீர்மானிக்கும் சக்தியை பெறுகிறார்கள்.

அப்படியானால் ஒட்டு மொத்த மக்களின் செயற்பாடுகளாலேயே இந்த அழிவுகளை தடுக்கலம். இதில் நமக்கு எல்லாம் ஒரு பங்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.