விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல – சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

0
61

விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சர்லாந்தின் சமஸ்டி குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமஸ்டி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுவிற்சர்லாந்தின் குற்றவியல் சட்டம் 260ஆவது சரத்தை மீறி 1999ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டிற்கிடையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12பேர் வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளதை சமஸ்டி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த அமைப்பு தமது சமூகத்தை சுயாதீனமான சமூகமாக அங்கீகரிக்கக் கோரியே பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.

சந்தேக நபர்களில் 5பேருக்கு எதிராக வர்த்தக ரீதியான மோசடி மற்றும் போலி ஆவணங்களை தயார் செய்தமை தொடர்பாக 11 முதல் 24 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமஸ்டி நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய விடுதலைப் புலிகளுக்காக சுவிற்சர்லாந்தில் நிதி சேகரிப்பதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தை மீறியதாக கருத முடியாது.

விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒரு தரப்பினர் போலி ஆவணங்களை தயார் செய்தார்களா என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த வழக்கில் மோசடி நடந்துள்ளதா என்பது குறித்து சமஸ்டி நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டியுள்ளது.

சுவிற்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குத் தொடர ஒன்பது வருடங்கள் ஆனது. இதற்கான செலவு நான்கு மில்லியன் பிராங் ஆகும். வழக்கின் செலவில் 55ஆயிரம் பிராங் செலவை சந்தேக நபர்கள் செலுத்த வேண்டும்.

இந்த சட்டம் அல்-குவைதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராகவும் கையாளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here