யாழில் ஊசி மூலம் ஹெரோயின் செலுத்திய இளைஞர் மரணம்

மது போதையில் இருந்த இளைஞர் மேலும் போதைக்காக ஹெரோயினை ஊசி மூலம் செலுத்தியதில் உயிரிழந்தார் என்று தெரிய வந்துள்ளது.

கொக்குவில் – கலட்டி பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட குறிப்பிட்ட இளைஞரின் சடலம் நேற்று முன்தினம் யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

சடலத்தின் தலையில் சிறு காயங்கள் காணப்பட்டமையால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனையில் உடலில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருளை உடலில் செலுத்தியமையே மரணத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

பொலிஸாரின் விசாரணையில் மரணமான இளைஞர் கலட்டி பகுதியில் மற்றொருவருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். மேலும் போதைக்காக அவர் ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை செலுத்தியுள்ளார்.

இதையடுத்து அவர் அங்கேயே விழுந்து மரணமானார். இதில் தலையில் காயங்கள் ஏற்பட்டன என்று கூறப்பட்டது. ஓட்டுமடத்தை சேர்ந்த சிவசேதநாதன் கோபிநாதன் (வயது -27) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கடந்த ஆண்டு ஊசி மூலம் ஹெரோயின் செலுத்திய 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்