மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் – காவல்துறை காட்டமாக வினவினார் சாணக்கியன்!

மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும்

மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த காவல்துறையினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மிகவும் காட்டமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தினத்தினை முன்னிட்டு இன்றையதினம்(வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.

WhatsApp Image 2022 04 28 at 21.30.45 1 மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் – காவல்துறை காட்டமாக வினவினார் சாணக்கியன்!

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சிவில் உடையில் வருகை தந்திருந்த காவல்துறையினர் கெமராக்களின் உதவியுடன் காணொளியாக பதிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில் இதன்போது கோபமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன் மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.