உலக மக்களின் ஆயுள் குறைகின்றது – ஐ.நா

உலக மக்களின் ஆயுட்காலம், கல்வி தகமை மற்றும் பொருளாதார வளம் என்பன வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள அபிவிருத்தி சுட்டென் பிரிவு இந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

10 நாடுகளில் 9 நாடுகள் இவ்வாறான வீழ்ச்சியை கடந்த இரண்டு வருடங்களாக சந்தித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19, உக்ரைனில் இடம்பெறும் போர் மற்றும் காலநிலை மாற்றம் என்பனவே இதற்கான காரணிகள்.

1990 களில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, நாடுகளின் மொத்த உற்பத்தி தகமை அடிப்படையில் இந்த கணிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுவிற்சலாந்தில் வாழும் மக்கள் அதிக ஆயுட்காலம் உடையவர்கள். அவர்களின் சராசரி ஆயுட்காலம் 84 வயது, கல்வியில் சராசரியாக 16.5 வருடங்களை செலவிடுகின்றனர், சராசரி வருமானம் 66,000 டொலர்கள்.

மறுவளமாக தென்சூடானில் வாழும் மக்கள் சராசரியாக 55 வயது ஆயுட்காலம் உள்ளவர்கள். 5.5 வருடங்களையே கல்வியில் செலவிடுகின்றனர். அவர்களின் சராசரி வருமானம் ஆண்டு ஒன்றுக்கு 768 டொலர்களாகும்.

191 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் மக்களின் ஆயுட்காலம் குறைவது அவதானிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.