சவூதி அரம்கோ மற்றும் அமெரிக்காவின் மாபெரும் நிறுவனமான டவ் கெமிக்கல் ஆகியவற்றின் 20 பில்லியன் டொலர் கூட்டு நிறுவனமான சதாரா கெமிக்கல், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலி இடையூறுகளைக் காரணம் காட்டி, தனது ஜுபைல் வளாகத்தில் உள்ள அனைத்து உற்பத்திகளையும் கால வரையின்றி நிறுத்தியுள்ளது.
சதாரா உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பெட்ரோ கெமிக்கல் ஆலைகளில் ஒன்றாகும். இதன் ஆண்டு உற்பத்தித் திறன் 3 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் ஆகும். இது பேக்கேஜிங் முதல் கட்டுமானம் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படும் எத்திலீன், புரோப்பிலீன், பாலிஎத்திலீன் மற்றும் பிற முக்கிய தொழில்துறை இரசாயனங்களை உற்பத்தி செய்கிறது.
உற்பத்தி எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து எந்த மதிப்பீட்டையும் வழங்க முடியாது என்றும், காலக்கெடு “உள்நாட்டு மற்றும் சர்வதேச காரணிகளைப் பொறுத் தது” என்றும் நிறுவனம் கூறுகிறது. இந்த நிறுத்தம் அதன் 2026 ஆம் ஆண்டு நிதி முடிவுகளை கணிசமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் முன்னதாக ஜுபைல் வளாகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தவுள்ளதாக அச்சுறுத்தியிருந்தது, ஆனால் இதுவரை அது தாக்கப்படவில்லை. இப்போது ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடத்தப்படாமலேயே சேதம் ஏற்பட்டுள்ளது.



