உலகம் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது – உலக சுகாதார மையம்

378 Views

கொரோனா தொற்று, குரங்கு அம்மை, யுக்ரேன் போர் என, உலகம் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது என உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா சுகாதார முகமை கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதில் பேசிய அவர், “காலநிலை மாற்றம், சமத்துவமின்மை மற்றும் புவிசார் அரசியல் போட்டி ஆகியவற்றால் மோசமடையும் நோய், வறட்சி, பசி மற்றும் போர் போன்ற கடுமையான நெருக்கடிகளை நாம் எதிர்கொள்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply