உலக பொருளாதாரம் மந்த நிலைக்கு அருகில்-உலக வங்கி

உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் விழும் அபாயத்திற்கு அருகில் உள்ளது என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்டதை விட இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 1.7%  மட்டுமே வளரும் என் எதிர்பார்ப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா மோதல் மற்றும் கொரோனா தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து உருவாகும் பல காரணிகளே இதற்கு காரணம் என அறிக்கை தெரிவிக்கின்றது.

உலகளவில் மந்தநிலை ஏற்பட்டால், 1930 களுக்குப் பிறகு ஒரே தசாப்தத்தில் இரண்டு முறை மந்தநிலைகள் பதிவாவது இதுவே முதல் முறை என்றும் உலக வங்கி கூறியுள்ளது.