இலங்கை : கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு பணிப்புரை

156 Views

விமான நிலைய ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்குவதற்கு ஏஏஎஸ்எல் நிறுவனத்திடம் போதிய எரிபொருள் இருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ராஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

AASL நிறுவனத்தினால் டீசலுக்கு முன்பதிவு வழங்கப்பட்ட போதிலும், இன்னும் பெறப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விமான நிலைய ரேடார் அமைப்புகளை இயக்குவது உட்பட AASL இன் அத்தியாவசிய சேவைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மேற்கொள்ளப்படும்.

அதேநேரம், இலங்கை விமானங்களுக்கு வழங்குவதற்கு போதுமான விமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

Leave a Reply