மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் நேற்று (21) 50ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த போராட்டத்துக்கு வடக்கின் பல பகுதிகளிலும் ஆதரவு வலுக்கிறது.
வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று மன்னாருக்கு சென்று போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளையோர் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு நாளாந்தம் மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கிராம மக்கள், பொது மற்றும் சிவில் அமைப்புக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி வருகின்றனர்.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்ற போதிலும் இதுவரையில் இறுதி தீர்வு எட்டப்படவில்லை.