எவரும் ஆணைக்குழு முன்னிலையில் சென்று எவரையும் குற்றம்சாட்டலாம்-ரணில்

யுத்தகுற்றச்சாட்டுகள் எவற்றையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை யுத்தகாலத்தில் அவரின் நடவடிக்கைகளிற்காக விசாரணை செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி எந்த குற்றச்சாட்டுகளையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில்  தெரிவிக்கவேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

எவரும் ஆணைக்குழு முன்னிலையில் சென்று எவரையும் குற்றம்சாட்டலாம், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக கூட குற்றம்சாட்டி அவரை விசாரணைக்கு அழைக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூடிமறைக்கின்றது என எவரும் தெரிவிக்க முடியாதுவெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் காணப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.